அக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.!!!!
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே அக்கநாயக்கன்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. முகாமிற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் அய்யாதுரை முன்னில வைத்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கமணி வரவேற்று பேசினார். முகாமிற்கு எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகமை தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முகாமில் இதயம், காது மூக்கு தொண்டை, பல், கண் நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் பொது மக்களுக்கு சர்க்கரை நோய், பிரஷர், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டன. மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் எம்.எல்.ஏ வழங்கினார்.
இந்த சிறப்பு முகாமில் அக்காநாயக்கன்பட்டி சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள் ஜீவராஜ்பாண்டியன், சுஜிதா, ஜெயபிரபா, அபிலஷா, சித்தா மருத்துவ அலுவலர் வான்மதி, கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி, யூனியன் ஆணையாளர் கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் காளிமுத்து நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி.