சென்னை: கடந்த (20.10.2023) அன்று சென்னையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும்; விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமாகிய உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஏற்பாட்டில், அணியின் ஆலோசகர் கோவி லெனின், மாநில இணை செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர்கள் கார்த்திக் மோகன், அழகிரி சதாசிவம், தருண், மதுரை பாலா, கேசவன், விஜய கதிரவன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு சிறந்த குழு செயல்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விருதினை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, பழனிக்குமார், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் தூத்துக்குடி சி.என்.அண்ணாதுரை, விளாத்திகுளம் ஸ்ரீதர், பாரதிதாசன், கரண்குமார், அருணா, கோவில்பட்டி ஹரிஹரன், மகேந்திரன், ஒன்றிய அமைப்பாளர்; கழுகுமலை பேரூர் வெங்கடேஸ்வரன், திரேஸ்புரம் பகுதி சுரேஷ்குமார், சண்முகபுரம் பகுதி மனோராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை சந்தித்து, சென்னையில் பெற்றுக் கொண்ட விருதினை காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றுக் கொண்டனர்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்: தமிழகத்தில் மற்ற மாவட்டத்தை காட்டிலும், வடக்கு மாவட்ட திமுக முதன்மையான வகையில் எல்லா அணிகளும் செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய கால சூழ்நிலைக்கேற்ப தகவல் தொழில்நுட்ப அணியில் செயல்பாடுகள், சேவைகள் அதிகளவில் இருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறிப்பதற்கு தகவல் தொழில்நுட்ப அணி முழுமையாக ஈடுபட்டு திமுகவின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும், என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டார். இதில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கருணா, மணி, அல்பர்ட் ஆகியோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை.