ஒட்டப்பிடாரம் அருகே ஆட்டோ பைக் மோதி விபத்து சுகாதார துறை ஊழியர் படுகாயம்.!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேலலட்சுமிபுரம் விலக்கு அருகே ஆட்டோவும் பைக்கும் மோதிக்கொண்டதில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஊழியர் படுகாயம் அடைந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் இந்திராநகரை சார்ந்த சுப்பிரமணிய மகன் மதிசந்திரன் வயது 25 இவர் சுகாதார துறையில் தற்காலிக ஓட்டுனராக தூத்துக்குடியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 07.30 க்கு வேலை முடித்து தனது இறு சக்கர வாகனத்தில் மேலலட்மிபுரம் விலக்கு அருகில் வரும்போது , தூத்துக்குடி எம்ஜிஆர் ரகரை சேர்ந்த சாமுவேல் ராஜ் மகன் முத்துக்குமார் வயது 31 ஓட்டப்பிடாரம்த்தில் உள்ள kramin kootta (லோன் எடுக்கும் தனியார் அலுவலகம்) வுக்கு வந்து திரும்ப தூத்துக்குடி செல்லும் போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு இதில் மதிசந்திரனக்கு வலதுகால் முட்டிக்கு கீழ் எலும்பு முறிவு, இடது கை சிராய்ப்பு காயம் ஏற்ப்பட்டது.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி.