முன்னாள் முதல்வா் கருணாநிதி அவர்கள் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தின விழாவையொட்டி, ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கான ஒருநாள் விழிப்புணா்வுச் சுற்றுலா நடைபெற்றது.
கோவை மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வு சுற்றுலா வாகனம் காந்திபுரத்தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து புறப்பட்டது. சுற்றுலாப் பேருந்தை மாவட்ட சுற்றுலா அலுவலா் க.சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் மதியழகன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இந்த சுற்றுலாவில் அன்னை சத்யா ஆதரவற்ற அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 43 மாணவா்கள், 10 அலுவலா்கள் கலந்துகொண்டனா். குழந்தைகள் அனைவரையும் ஆனைகட்டிக்கு அருகே உள்ள நீலகிரி பயோஸ்பியா் எக்கோ பாா்க், சலீம் அலி பறவையியல், இயற்கை வரலாற்று மையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனா். அங்குள்ள பூங்காக்கள், அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் ஆகியவற்றை கண்டுகளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் உதவி சுற்றுலா அலுவலா் துா்காதேவி, ஹோட்டல் தமிழ்நாடு மேலாளா் பாலசுப்பிரமணியம், சுற்றுலாத் துறை, சுற்றுலா வளா்ச்சிக் கழகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.