தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைந்து ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. 75 ஆண்டு கடும் போராட்டத்திற்கு பின்னர் 2022ஆம் ஆண்டு தற்காலிக கட்டிடத்தில் குறுக்குசாலை செல்லும் வழியில் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றம் அமைய காரணமாக இருந்த அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர் பொதுமக்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஒட்டப்பிடாரம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான தலைவர் ஜெகதீஷ் அவர்கள் துணைத் தலைவர் பரமசிவன் அவர்கள் செயலாளர் மரகதவேல் அவர்கள் இணைச் செயலாளர் ஆனந்தி அவர்கள் பொருளாளர் விஜயகுமார் அவர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது, லாரன்ஸ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்த விழாவில் ஒட்டப்பிடாரம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் நீதிபதி அவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.