தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தின் சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அக்டோபர் 18ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை ஓட்டப்பிடாரம் வ உ சி மேல்நிலைப்பள்ளி , குறுக்கு சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, தூ. ந தீ. க. புதியம்புத்தூர் ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது.
கவின் கலை , இசை, மொழிதிறன், நடனம் நாடகம் ஆகிய தலைப்பின் கீழ் போட்டிகள் நடைபெற்றன, பள்ளிகளுக்கு டோக்கன் வழங்கி பதிவு செய்யப்பட்டது. இதில் 450 மாணவர்கள் கலந்து கொண்டனர் . போட்டிக்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.