தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் சார்பாக பூத கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ,கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர் கடம்பூர்.செ.இராஜூ MLA.,அவர்கள் ஆலோசனையின் படி, ஓட்டப்பிடாரம் , அகிலாண்டபுரம் மற்றும் புதியம்புத்தூர், பாஞ்சை இந்திராநகர் ஆகிய பகுதியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்எல்ஏ ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
அப்போது வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆயத்த பணிகள் மகளிரணி நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கையேடு , இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை, வாக்குச்சாவடி முகவர்கள் விவரம் கையேடு ஆகியவற்றை பூர்த்தி செய்து புதிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சேர்க்கும் பணி உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பூத் கமிட்டி முகவர்கள் ,மூத்த தொண்டர்கள் ,கழக மகளிரணியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.