தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் பணி புரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கம் பயிற்சி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் நிகழ்ச்சியினை சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மு.சிவ பாலன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீமன் சிறப்புரை ஆற்றினர். உணவு பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் அவர்களால் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
யோகா மற்றும் இயற்கை மருத்துவர் இந்துமதி அவர்களால் மன அழுத்தம் மேலாண்மை மற்றும் யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து எளிய யோகா பயிற்சி வழங்கப்பட்டது . சக்தி நிபுணர் சுமதி அவர்கள் நோய் எதிர்ப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்காக சிறு தானிய ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா அவர்களால் தொடர்பு கொள்ளப்பட்ட திறன் பற்றிய தகவல் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது. அன்பு மாலதி மருத்துவ அலுவலர் அவர்களால் முதல் உதவி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விலக்கப்பட்டது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.