வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடிவரும் MRB செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய 700 செவிலியர்களை போலீஸார் கைது செய்தனர். திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல, எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் பல்வேறு கட்டங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் தோழர் கருப்பசாமி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்புதிட்ட வட்டாட்சியர் தோழர் S.செல்வகுமார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்டத் செயலாளர் தோழர் திருமலை சிறப்புரை வழங்கினார்.வேளாண்மை துறை சார்பாக தோழர். சிவா மற்றும் தூத்துக்குடி வட்ட துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோரும் துணை வட்டாட்சியர் சுடலைமணி வாழ்த்தி பேசினார் நன்றியுரை தோழர் விக்னேஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.