தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் ஓட்டநத்தம் பகுதியில் உள்ள தனியார் உரம் மற்றும் பூச்சிமருத்து விற்பனை நிலையத்தில் நேற்று உரம் மற்றும் பூச்சி மருந்து இருப்பு குறித்து வட்டார வேளாண்மை அலுவலர் திருமதி. சிவகாமி ஆய்வு மேற்கொண்டடார்.
விவசாயிகள் யூரியா டி ஏ பி போன்ற உரங்களை அருகில் உள்ள தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் உர விற்பனை நிலையங்கில் மட்டுமே வாங்க வேண்டும். உரம் வாங்கும் பொழுது கண்டிப்பாக POS மூலம் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என வட்டார வேளாண்மை அலுவலர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.