விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் கஞ்சம்பட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது . ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அருமை நாயகம் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் ஊராட்சி மன்ற செயலாளர் கிராம வரவு செலவு கணக்குகளை வாசித்தார் .இதனை தொடர்ந்து கிராமத்தின் வளர்ச்சி , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கிராமத்தின் சுற்று பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தற்போது வரை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில் விவசாயத்தை அழிக்கும் நோக்கில், தங்களது சுயலாபத்திற்காக சில விவசாய நிலங்களை அரசு விதிமுறைகளை மீறி வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு எவ்வித அனுமதி வழங்கக் கூடாது, அதற்கு ஊராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலு தனது கோரிக்கை மனுவினையும் வழங்கினார். இது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.