விளாத்திகுளம் அருகே குளத்தூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக கூடுதல் வழித்தடத்தில் பேருந்து இயக்கம் பொதுமக்கள் வரவேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் வழித்தடத்தில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்காக அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கொடியைசைத்து தொடங்கி வைத்தார்.
கடந்த மாதம் நடந்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது அப்போது பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்காக கூடுதல் வழித்தடத்தில் குளத்தூரில் இருந்து முத்துக்குமாராபுரம் வழியாக செல்லும் பேருந்து இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது அந்தக் கோரிக்கையை ஏற்று வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக மேலாளரிடம் கோரிக்கை வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொதுமக்கள் மற்றும் வட்டாட்சியரின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் கூடுதல் வழித்தடமான
குளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து முத்துக்குமாராபுரம் வழியாக வீரபாண்டியபுரம்,
டி.சுப்பையாபுரம், முத்துராமலிங்கபுரம் குளத்தூர் வந்து மீண்டும் அரசு பேருந்து விளாத்திகுளம் செல்கிறது.
பள்ளி நேரமான காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் இயக்கப்படும் இந்த பேருந்தை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் என பலர் வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்,அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெகநாதன்,குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து,மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,மாவட்ட கவுன்சிலர் மிக்கல் நவமணி,நடராஜன்,ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன்,குருநாதன் செந்தூர்பாண்டி,குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்ல பாண்டி,வீரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லெக்கமாள் தேவி,வேம்பார் தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ்,நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி,டி. சுப்பையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பு,வைப்பார் ஊராட்சி மன்ற தலைவர் ராமர்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து,ஒன்றிய சிறுபான்மையினர் அணி செல்வின், ஒன்றிய இலக்கிய அணி மாரியப்பன், மாணவரணி அமைப்பாளர் முனியசாமி, கிளைச் செயலாளர்கள் மந்திர மூர்த்தி, முனியசாமி, பொன்னுச்சாமி, ரவிச்சந்திரன், பொன்மாரியம்மன், பரமசிவன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி.