குளிக்க இடமிருந்தும் துணி மாற்றுவதற்கு இடம் இல்லை!! அத்தியாவசிய பொருள் வாங்க கடை இருந்தும் பயனில்லை!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தற்போது குவிந்து வருகின்றனர்.

காலாண்டு தேர்வு விடுமுறை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வால்பாறையில் குவிந்த வண்ணமாக உள்ளனர் இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாத்தலங்களை சுற்றி பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிக்கின்றனர் சின்னக் கல்லார் அணை, நீரார் அணை, சோலையார் அணை, கூழாங்கல் ஆறு, வெள்ளை மழை டணல், பனி மேகத்துடன் காணப்படும் கவருக்கள் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

இப்பகுதிகளில் வாகன நெரிசல்களும் அதிகளவு காணப்படுகின்றது தற்பொழுது மழையும் வருவதால் இது போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைத்து கொண்டே சுற்றுலா தளங்களை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் சில இடங்களில் குளித்துவிட்டு உடைமாற்ற வசதி இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடங்களில் உள்ள கடைகள் சரிவர இயங்காமல் இருப்பதால் அவர்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்ததால் சிலர் தங்குவதற்கு கூட இடம் கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

சி. ராஜேந்திரன், திவ்யகுமார்.

Leave a Comment

One Response

  1. சுற்றுலாப் பயணிகளால் இந்த ஆறு குப்பை கூலமாக மாறி வருகிறது. கடந்த முறை நான் வால்பாறை வந்து பார்த்தபோது கூலங்கல் ஆற்றின் கரையோரம் இவர்கள் சாப்பிடும் தட்டுகள், பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் எரிந்து விட்டு செல்வதால் ஆறு மாசடைந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்தும் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp