கோவை, சிறுவாணி அணைப்பகுதியில் ஒரே நாளில், 105 மி.மீ., மழை பெய்ய அணையின் நீர் மட்டமானது, 25.78 அடியாக அதிகரித்துள்ளது. கோவை மக்களின் குடிநீர் தேவையை சிறுவாணி, பில்லுார் அணைகள் மற்றும் பவானி, ஆழியாறு உள்ளிட்ட அணைகள்9 பூர்த்தி செய்து வருகின்றன.
பருவ மழை போதிய அளவு பெய்யாததால் சிறுவாணி அணை நீர்மட்டம்
ஆக., மாதம், 20 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் இருந்தது. கடந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால், தினமும் சராசரியாக, 6.5 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்தும், 23 அடி என, நிலையாக இருந்து வந்தது.
கடந்த ஒரு வாரமாக சிறுவாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைப்பகுதியில், 105 மி.மீ., மழையும், அடிவாரத்தில், 26 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது; நீர் மட்டமானது, 25.78 அடியாக உயர்ந்துள்ளது இதனால் கோவை மக்களுக்கு வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.