கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் கடந்த வாரம் சமூக தூய்மை பணி நடைபெற்றது. தூய்மை பணியில் வால்பாறை கால்பந்தாட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் குறிப்பாக இளம் வீரர்களுக்கு சிறப்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இன்று கால்பந்தாட்ட மைதானத்தில் வால்பாறை நகர மன்ற தலைவி திருமதி அழகு சுந்தரவல்லி அவர்கள் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்.
மேலும் வீரர்களுக்கு பயிற்சி அளித்த கால்பந்தாட்ட சங்கத்தின் துணைத் தலைவர் சதீஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் செய்து அலி ஆகிய இருவரையும் பாராட்டி கௌரவப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு சங்கத்தின் சார்பாக சான்றிதழ்களும் கால்பந்தையும் பரிசாக வழங்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் இது போன்ற செயல்கள் நடைபெறுவதால் இளம் வீரர்களை ஊக்குவிப்பது மிகவும் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்வின் நகராட்சி துணைத் தலைவர் அவர்களும் நகர்மன்ற உறுப்பினரும் வால்பாறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் அவர்களும் கால்பந்தாட்ட சங்க நிர்வாகிகளும் இளம் வீரர்களும் கலந்து கொண்டனர்.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில் வால்பாறை நகராட்சி மூலம் தூய்மையான பாதுகாப்பான கால்பந்தாட்ட மைதானத்தை சரி செய்து வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
-P.பரமசிவம், வால்பாறை.