தூத்துக்குடி மாவட்டம்புதியம்புத்தூரில் ஓட்டப்பிடாரம் உதவிசெயற்பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட விநியோக பிரிவு அலுவலக மின் பணியாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த களப்பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் கனி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் பகிர்மான மின்வலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து களப்பணியாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் விருதுநகர் மின்வாரிய பயிற்சி மைய முதுநிலை மேலாளர் சிவகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் போர்மேன் ஓய்வு ஆவுடையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பேசினர்.
அப்போது எர்த் ராடு பயன்படுத்த வேண்டும், பணியின் போது கையுறையை கண்டிப்பாக அணிய வேண்டும், இடுப்பு கயிறை பயன்படுத்த வேண்டும், பணியின் போதும் வாகனம் ஓட்டும் போதும் மதுவை அறவே தவிர்க்க வேண்டும், மழை வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பணி பாதுகாப்பு இல்லாத இடங்களில் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.https://youtu.be/EPF2Qk_Cu2c
இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் நகர்ப்புறம் ராம்குமார், செயற்பொறியாளர் ஓட்டப்பிடாரம் சுடலைமுத்து, உதவி பொறியாளர்கள் ஓட்டப்பிடாரம் மணி சேகர், ஒட்டநத்தம் பால்முனியசாமி, புளியம்பட்டி ராஜேஷ்,புதியம்புத்தூர் சண்முகத்தாய் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி