பொள்ளாச்சியில் ஒருநாள் தலைமை ஆசிரியரான பத்தாம் வகுப்பு மாணவன்…!!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக 10 ம் வகுப்பு மாணவன் தர்ஷன் பதவி அமர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்த பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ மாணவியரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக அமர்த்த தலைமையாசிரியர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் பத்தாம் வகுப்பு ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர் தர்ஷன் முதல் மதிப்பெண் பெற்றதால் அவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராகவும் ,இதே பத்தாம் வகுப்பு தமிழ் மீடியத்தில் பயிலும் சுபின் ராஜ் என்ற மாணவரும் முதல் இடத்தை பிடித்ததால் அவரை உதவி தலைமை ஆசிரியராகவும் பதவியில் அமர்த்தி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆசிரியர் முருகேசன் வரவேற்று பேசினார். தலைமையாசிரியர் ஹரி கிருஷ்ணன் உதவி தலைமையாசிரியர் ஹேமலின் மகிலா ஆகியோர் மாணவர்களை தலைமை ஆசிரியர் இருக்கைகளில் அமர்த்தி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் இரண்டு மாணவர்களுக்கும் கைக்கடிகாரம் மற்றும் பரிசுப் பொருட்கள் மற்றும் காலாண்டு தேர்வில் அடுத்தடுத்து மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசுகளையும் நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் அதன் தலைவர் வெள்ளை நடராஜ் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கவிஞர். பொள்ளாச்சி முருகானந்தம், நகர மன்ற உறுப்பினர் சாந்தலிங்கம் ஆகியோர் மாணவ மாணவிகளிடையே உரையாற்றி வாழ்த்துரை வழங்கினர். இதில் பொள்ளாச்சி நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி. பள்ளி ஆசிரியர்கள்,பயிற்சி ஆசிரியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியில் ஆசிரியர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.