பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்ச்சி நிறைவு விழா பொள்ளாச்சி ஏபிடி சாலையில் உள்ள நகர்மன்ற நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே. முருகேசன் அவர்கள் தலைமை தாங்கினார் . ஏபிடி பள்ளி தலைமையாசிரியர் ஷாலினி முன்னிலை வகித்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவரும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான வெள்ளை நடராஜ்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சுப்பிரமணியம்.வெங்கடேஷ் ஆகியோர் மாணவர்களிடையே தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என். சி.சி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகளை அகற்றியும் புல் புதர்களை அகற்றியும் மற்றும் அந்த சாலையில் உள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தியும்
வீடு வீடாகச் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை பெற்றுக் கொண்டும் அது குறித்த விழிப்புணர்வு கருத்துக்களையும் பொதுமக்களிடையே வழங்கினார் .மேலும் என்.சி.சி மாணவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை. புளியம்பட்டி நடுநிலை பள்ளி வளாகம் மற்றும் கிராமப் பகுதிகளில் குப்பைகளை தூய்மைப்படுத்தியும் பொது மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
இதை தொடர்ந்து இந்த முகாமில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கதுரை அவர்கள் தலைமையில் மாணவர்களிடையே போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் இலக்கிய நிகழ்வு. மனநல ஆலோசனை. சமுதாய விழிப்புணர்வு
அலுவலக கடிதம் எழுதுதல் நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இறுதியாக ஏழாவது நாள் நிகழ்ச்சி நிறைவு விழாவாக இந்த நிகழ்ச்சியில் ஏபிடி ரோடு பள்ளி வளாகத்திற்குள் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இறுதியில் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் முகமது காஜாமைதீன் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன். பொள்ளாச்சி.