திருப்பூர் குமரன் கல்லுாரியில், பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் சத்யா.
தமிழக மல்யுத்த அணியில் இடம் பெற்றுள்ள இவர் ஹரியானா மாநிலம், ரோத்தக் மகரிஷி தயாளந்த் பல்கலையில், நான்கு நாட்கள் நடந்த தேசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்று, 84 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார். தேசிய போட்டியில் தங்கம் வென்ற மாணவியை கல்லுாரி முதல்வர் வசந்தி, உடற்கல்வித்துறை இயக்குனர் முருகேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.