தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர்களும் இலட்சுமணபெருமாள் அவர்கள் ஏற்பாட்டில் வல்லநாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி படிவங்கள் சரிபார்ப்பது தொடர்பாக பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வரும் பாரளுமன்ற தேர்தல்களில் எவ்வாறு பணி செய்யவேண்டும், திமுகவின் பொய்யான வாக்குறுதியை மக்களிடம் எடுத்துரைத்த வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது .
இந்த பூத்து கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விழாவிற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும் அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.மோகன் B.Sc., அவர்கள் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவேல் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் உயர்திரு.வீரபாண்டி P.கோபி அவர்கள் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் MRV.கவியரசன் அவர்கள் மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி அவர்கள் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தினேஷ் குமார், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் MS கண்ணன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பூத் கமிட்டி முகவர்கள் ,மூத்த தொண்டர்கள் , மகளிரணியினர் என பலர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.