வால்பாறையில் குப்பை கிடங்கால் நோய் தொற்று பரவும் அபாயம்!!
சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள், போன்றவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை பகுதியில் உள்ள குப்பை கிடக்கு முறையான பராமரிப்பின்றி உள்ளதால் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நாய்கள் போன்றவை குப்பை கிடங்குக்குள் புகுந்து குப்பை கழிவுகளை பரப்பி விடுகின்றன குப்பை கிடங்கை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் இல்லாத காரணத்தால் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் நாய்கள் போன்றவை குப்பை கிடங்குக்குள் புகுந்து விடுகின்றன. இதன் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை பரப்பி விடுகின்றன மேலும் குப்பை கழிவுகளில் உள்ள பிளாஸ்டிக்குகளையும் மாடுகள் உட்கொள்வதால் அதற்கு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் காற்று மற்றும் மழைக்காலங்களில் குப்பைகள் அடித்து வரப்பட்டு ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன எனவே குப்பை கிடங்கை முறையாக பராமரிக்க வேண்டும் மேலும் அதற்கு பாதுகாப்பு சுவர் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர் சென்னை கோவை போன்ற மாநகராட்சிகளில் சாலைகளில் மாடுகள் மற்றும் நாய்கள் சுற்றி திரிந்தால் அவற்றை மாநகராட்சி நிர்வாகம் பிடித்துக் கொண்டு சென்று விடுகின்றனர்.
மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர் ஆனால் வால்பாறையில் இது பற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் கூறுகின்றனர் மேலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் மற்றும் நாய்களால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்படுகின்றன எனவே சுற்றுச் சுவர் இல்லாமல் இருக்கும் வால்பாறை குப்பை கடங்கிற்கு சுற்றுச் சுவர் எழுப்பி குப்பைக் கழிவுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் நாய்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த அவைகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு தக்க அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வால்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
சி.ராஜேந்திரன்
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
திவ்யக்குமார்.