கோவை மாவட்டம் பொள்ளாட்சி வட்டம் வால்பாறை பகுதிக்கு அருகில் நடுமலை தெற்கு பிரிவு வடக்கு பிரிவு என்ற இரண்டு டிவிசன் உள்ளது இந்த பகுதியில் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள சாலையாக உள்ளது. இந்த சாலையில் பிஏபி பாலம் இரண்டு உள்ளது அதன் இரண்டாவது பாலத்தின் அருகே உள்ள சாலையானது மிகவும் பழுதடைந்து உள்ளது மேலும் மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.
மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு அந்த சாலையானது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் அந்த பகுதியை கடந்து வருகின்றனர்.
இந்த சாலையின் வழியாகத்தான் அப்பகுதி எஸ்டேட் பொதுமக்கள் சென்று வருகின்றனர் மேலும் லாரி, கார், இருசக்கர வாகனங்கள் ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்களின் முக்கிய வழித்தடமாக உள்ள இந்த பாதை படுதடைந்து அபாயகரமாக உள்ளதால் இதை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.