கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வால்பாறை பகுதி சுற்றிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் நன்றாக பசுமையாக காட்சியளிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை தினமாக இருப்பதால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். தற்பொழுது பெய்து வரும் மழையினால் தேயிலைத் தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
மேலும் தற்பொழுது பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே புதிதாக அருவிகள் தோன்றி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகின்றது.
பச்சை பசேல் என இருக்கும் மலைகளுக்கு நடுவே வெள்ளி கம்பி போல் அருவிகள் விழும் காட்சி சுற்றுலாப் பயணிகளின் மனதை கொள்ளை கொள்வதாக உள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
தற்பொழுது தொடர் விடுமுறை காலமாக இருப்பதால் சுற்றுலா பகுதிகளில் வருகை அதிகரித்து காணப்படுகிறது. தேயிலை செடிகள் பசுமையாக நன்கு வளர்ந்து உள்ளதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி ராஜேந்திரன், திவ்யகுமார்.