தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் விளாத்திகுளத்தில் 100- கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் கற்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜீன்னிசா மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், ராமலிங்கம், கிருஷ்ணகுமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணைத்தலைவர் சென்றாய பெருமாள் உட்பட வார்டு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர் பூங்கோதை