வேற்றுமைகள் களைந்து சமத்துவமிக்க சமுதாயம் உருவாக்கிடத் தொண்டாற்றிய
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 116-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பும்,மீரான் பாளையம் தெருவிலும் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்வில் பசும்பொன் தேசிய கழகம் சுப்பிரமணிய தேவர்,பரமசிவ தேவர்,சேதுபதிதேவர் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கேப்டன்கேசவன் வார்டு செயலாளர் ஸ்டாலின்கென்னடி,மாரிராஜ், வெங்கடேசன் முன்னாள் வார்டு உறுப்பினர் பி.பி.கே ராமமூர்த்தி கமலாபுரம் மாரிச்சாமி பசும்பொன் பழனிச்சாமி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.