தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளுக்கான சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் தமிழ்நாட்டில் ஊராட்சி நிர்வாக அழைப்புகள் பற்றியும் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதியாக பெண்களின் பங்கேற்பு உள்ளாட்சி நிர்வாகத்தில் மகளிர் பங்கு சுயசார்பு தன்மை சவால்கள்,
பாலின சமத்துவம் பாலின சரிநிகர் வரவு செலவுத் திட்டங்கள், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பெண்களுக்கான உரிமைகள் சட்டங்களை, பட்டியல் சாதினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதை இவ்வாறு கையாள்வது, மத்திய மாநில அரசு திட்டங்கள் , ஆளுமை திறமையை வளர்த்தல், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான விளக்கங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பயிற்சியில் சென்னை மறைமலைநகரில் உள்ள SIRD பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மண்டல பயிற்றுனர்கள் பொ.அதிசய மணி, ஆ.கலா ஆகியோர் பயிற்சியினை நடத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.