Trending

ஒளிராத சிக்னலால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்! விபத்து ஏற்படும் அபாயம்!! நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்!!!

பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் முக்கிய பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டும், சென்டர் மீடியனில் வாகனங்கள் திரும்பும் வகையில் ‘யு டேர்ன்’ பகுதி அமைக்கப்பட்டது. இப்பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தவிர்க்க ரோட்டில் குறுக்கு பட்டைகள், சர்வீஸ் ரோடு முடியும் இடத்தில் வேகத்தடைகள், ஆங்காங்கே சிக்னல்கள் மற்றும் தடுப்புகள் வைத்து விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தேசிய நெடுஞ் சாலைத்துறை சார்பில் பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் விபத்து நடப்பது தொடர்கதை ஆகியுள்ளது. இதை தவிர்க்க அதிக விபத்து நடக்கும் இடமான வாகனம் திரும்பும் சென்டர் மீடியன் பகுதியில் சிவப்பு நிற பிளிங்கர் சிக்னல்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

இதனால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டுநர்கள், இதை கண்டு வேகத்தை குறைத்து கடந்து சென்றனர். ஆனால், தற்போது கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்னல்கள் திடீரென ஒளிராததால் இரவு நேர வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே உடனடியாக இந்த சிக்னல்களை நிரந்தரமாக இரவு நேரத்தில் ஒளிர செய்ய வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp