கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சந்தை மேற்கு வீதியில் உள்ள அப்துல் மாளிகையில் நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் சட்ட கவசம் மாத இதழின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி சட்ட கவசம் பத்திரிகையின் ஆசிரியர் கோ. கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி மிக சிறப்பாக நடைபெற்றது.பத்திரிக்கை அலுவலக திறப்பு விழாவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர், ஆனைமலை பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ARV சாந்தலிங்ககுமார் தலைமையேற்று ரிப்பன் வெட்டி சட்ட கவசம் மாத இதழின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் தென் சங்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் SVR அண்ணாதுரை குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். மற்றும் இந்நிகழ்ச்சியில் ஆனைமலை நகர திமுக துணைச் செயலாளர் A.அபுதாகிர், கோவை தெற்கு மாவட்ட திமுக கட்சியின் சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் பைஜில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தனர்.
மேலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆனைமலை நகர தலைவர் சாகுல் ஹமீது, அரசியல் ரிப்போர்ட்டர இதழின் நிருபர் முத்துராஜ், தமிழ் டுடே இதழின் நிருபர் சாமிநாதன், அரசியல் அதிரடி இதழின் ஆனைமலை தாலுக்கா நிருபர் துரைவளவன், நாளைய வரலாறு புலனாய்வு மாத இதழின் துணை தலைமை நிருபர் சுரேஷ்குமார், கருடன் அரசியல் இதழின் ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி நிருபர்கள் மாணிக்கம், சத்தியபாமா, திராவிடர் விடுதலைக் கழகம் ஆனைமலை நகர செயலாளர் ஹரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சட்ட கவசம் தமிழ் மாத இதழின் தலைமை நிருபர் AA.அப்பாஸ் மற்றும் உதவி தலைமை நிருபர் P.சின்னமுத்துச்சாமி ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்,
-M.சுரேஷ் குமார்.