இந்து தேசிய காட்சி தலைவர் நேரில் பார்த்த பின் பேசியது:- ஒருவார காலத்தில் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பகவத்சீங் பேருந்து நிலையம் முன் மாபெரும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தெருவில் முகப்பு அதாவது கீழரதவீதியும் வடக்கு ரத வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட யானைச் சாலை என்னும் இடத்தில் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கழிப்பறை மற்றும் குளியலறை கட்டப்பட்டு வருகிறது அறிகிறோம்.
அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோவில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மற்றும் மாசித்திருநாள் நடைபெறும் போது, அனைத்து நாட்களிலும் யானை சாலையின் எதிரே உள்ள சவுக்கடியில் உள்ள மண்டபத்தில் வைத்து, அம்பாளுக்கு அபிஷேகம் தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும். மேலும் இந்த தெருவில் அன்பிற்பிரியாள் அம்மன் மற்றும் அருள்மிகு துர்கா பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. செவ்வாய், வெள்ளிக்கிழமை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இந்த பகுதியில் தான் பேருந்து நிலையம் வந்து செல்வது வழக்கம்.
எங்கள் பகுதியில் சுமார் 500 குடும்பம் இருக்கின்றன இங்கு கழிவுநீர் பாதள சாக்கடை திட்டம் மூலம் கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது, இந்த யானை சாலையில் கழிப்பறை மற்றும் குளியலறை காட்டினால் மேலும் சுகாதாரம் சீர்கேடு ஏற்படும்.அதான் அருகில் பொதுமக்களுக்கும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இடையூறுகள் தொல்லைகள் ஏற்படும் மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவே இந்த இடத்தில் கட்டடம் வேண்டாம் என சென்னை ஆணையர் கேட்டுக்கொள்கிறேன் ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து தேசிய கட்சி.
இந்த நிகழ்ச்சியில் இந்து தேசிய கட்சி நிருவனர். SSS மணி ஜி தலமையில்.
தூத்துக்குடி மாவட்டம் தலைவர் KJSINGH சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் அமிர்தராஜ்.
சாத்தான்குளம் ஒன்றிய துனைத்தலைவர் சேர்மதுரை. சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர்
ரமேஷ் குமார். சாத்தான்குளம் ஒன்றிய துனைச்செயலாலர் ஆல்வின்.
மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்கு ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.