தூத்துக்குடி மாநகரத்தின் தந்தை என்று அழைக்கக்கூடிய ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸ் அவர்களின் 154ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று(15.11.2023) தூத்துத்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜின் பேக்டரி ரோடு சந்திப்பு சிக்னல் அருகில் அமைந்துள்ள ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸ் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்கள், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி,இ.ஆ.ப., அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா அவர்கள் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.