கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நல்ல முடி எஸ்டேட் குடியிருப்புக்கு அருகில் பத்துக்கு மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. யானை கூட்டத்தை கண்ட அப்பகுதி தொழிலாளர்கள் அச்சமடைந் துள்ளனர்கள்.
அப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்புடன் யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.