கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியானது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இல்லாமல் சற்று தொலைவில் உள்ளது.
எனவே இங்கு படிக்கும் மாணவர்கள் வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் மேலும் பகல் நேரங்களிலேயே வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இது குறித்து அப்பள்ளி ஆசிரியர்களிடம் கேட்ட பொழுது எஸ்டேட் பகுதிகளிலேயே காலியாக உள்ள வீட்டை ஒதுக்கி கொடுத்தால் அங்கேயே பள்ளிக்கூடத்தை நடத்திக் கொள்ளலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுபோன்று பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளதால் இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சூழ்நிலையில் இந்த பள்ளி கட்டிடத்தை காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்தி உள்ளன.
எனவே பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் உள்ள இந்த பள்ளி கட்டிடத்தை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு மாற்றி தர வேண்டும் என்று அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.