கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் அவர்கள் திடீர் ஆய்வு செய்தார். அப்பொழுது மருத்துவமனை ஊழியர் மருத்துவர் மற்றும் நோயாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வின்போது மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவ மனையில் என்னென்ன உபகரணங்கள் உள்ளது, நோயாளிகளுக்கு எந்த வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் நோயின் தன்மை எவ்வாறு சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதையும் நோயாளிக்கு வழங்கப்பட்டிருக்கும் பெட்டு பெட்கவர் பெட்ஷீட் ஆகியவற்றையும் பரிசோதித்தார்.
இவரது ஆய்வின் போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மிகவும் சந்தோஷம் அடைந்தனர். இவர்கள் போலவே வெளி நோயாளிகளும் சந்தோஷப்பட்டனர். இதுவரை இருந்த மாவட்ட இணை இயக்குனர்கள் இப்படி ஆய்வும் செய்யவில்லை நோயாளிகளையும் பரிசோதிக்கவில்லை.
இது தொடர்பாக நமது நாளைய வரலாறு செய்தி வால்பாறை அரசு மருத்துவமனை சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் குறைவு சரியான உபகரணங்கள் இல்லை என்ற செய்தி வெளியிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட இணை இயக்குனர் வால்பாறை அரசு மருத்துவமனையே ஆய்வு செய்கிறார் என்று எதிர்பார்க்கிறார்கள் பொது மக்கள்.
கூடிய விரைவில் இப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் இப்பகுதியில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் வால்பாறை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் உறுதி செய்தார். தேவையான மருத்துவர்களையும் ஊழியர்களையும் உபகரணங்களையும் வாங்கி தருவதற்கு ஆலோசனை நடத்துகிறேன் என்றும் கூறினார்.
இவரது ஆய்வின் போது வால்பாறை அரசு மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தது கண்கூடாக பார்க்க முடிந்தது. இவரது வருகை,நோயாளிகளிடம் பேசிய விதமும், மருத்துவரிடமும் உரிய சிகிச்சை அளிக்க என்னென்ன தேவை என்பதை கேட்டு அறிந்ததும் நமக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. கூடிய விரைவில் வால்பாறை அரசு மருத்துவ மனையில் அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று நம்புவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
P.பரமசிவம் வால்பாறை.