விளாத்திகுளம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெறும் என்று தாசில்தாா் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் : இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அறிவுரையின்படியும் தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 1 – 2024 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்(31.13.2004) அன்று பிறந்தவர்கள் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம்- 2024 சிறப்பு முகாம் இந்திய தேர்தல் ஆணையத்தால் நவம்பர் 4, 5 , 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறப்பு முகாம் நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விளாத்திகுளம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் நவம்பர் 4,5,18 மற்றும் 19 தேதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (படிவம் 6) வாக்காளர் பெயர் பதிவு செய்தல், (படிவம் 6ஏ) வெளிநாட்டு வாழ் வாக்காளர், (படிவம் 6 பி) வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல், (படிவம் 7) பெயரை நீக்குதல், (படிவம் 8)விவரங்களை திருத்துதல் ஆகியவை பெறப்படும். எனவே பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி நிலையங்களுக்கு சென்று உரிய படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.