ஒட்டப்பிடாரம் அருகே சிலோன் காலணியில் வாக்குசாவடியில் வாக்காளர் அடையாள அட்டை பதிவுசெய்யும் முகாமில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பாஞ்சாலங்குறிச்சி இந்திரா நகர் சிலோன் காலணி சேவைமையம் வாக்குசாவடியில் வாக்காளர் அடையாள அட்டை பதிவுசெய்யும் முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் ஆய்வு செய்தார். தமிழ் நாடு முழவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்து திட்டம் 2024 முகாம் நடைபெறுகிறது.
வாக்காளர்கள் பெயர் பதிவு செய்தல் சரிபார்த்தல், கைப்பேசி செயலி மூலம் இணையவழி சரிபார்த்தல் 4. 11.2023 மற்றும். 5. 11.2023 அடுத்து தேதி 18.11.2023 & 19.11.2023 இந்த தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த ஆய்வின் போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ் அவர்கள் வருவாய் அலுவலர் வசந்தகுமார் அவர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர் கருப்பசாமி அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜா அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.