கோவை மாவட்டம், தமிழக அரசு சார்பில் வால்பாறையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வால்பாறை வட்டார வள மையத்தின் சார்பாகவும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் மாணவர்களின் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி மாணவச் செல்வங்கள் உதவித்தொகை பதிவு செய்தல், புதுப்பித்தல், மருத்துவ பரிசோதனையும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்வதற்காகவும் மாற்றுத்திறனாளிகள். மற்றும் மாணவச் செல்வங்களை பாதுகாக்கும் விதத்தில் நடைபெற்ற
இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் அரசு உதவி பெறுவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமினை, கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை, நிபுணர்.
டாக்டர் எஸ். அன்வர் அலி உட்பட பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டு முகாம்மனை நடத்தி வைத்தனர்.
இந்த சிறப்பு முகாமிற்கு வால்பாறை நகர மன்ற தலைவர் திருமதி அழகு சுந்தரவல்லி செல்வம் அவர்களும், நகர மன்ற துணைத் தலைவர் தாமஸ் செந்தில், மற்றும் உறுப்பினர்கள் ஜே பி பாஸ்கர், அன்பரசு, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். வால்பாறை வட்டார வள மையம் அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஈசா, பரமசிவம்.