வால்பாறையில் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள், அங்குள்ள தொழிலாளா் வீடுகளை சேதப்படுத்திவிட்டுச் சென்றன.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இரவு நேரத்தில் கூட்டமாக வரும் யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்திவிட்டுச் செல்கின்றன.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வந்த 9 யானைகள் புகுந்தன. பின்னா் அவை அங்குள்ள தொழிலாளா்கள் வீடுகளின் ஜன்னல், கதவுகளை முட்டித் தள்ளி உள்ளிருந்து துணிகள் உள்பட பல பொருள்களை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. தகவலறிந்து சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினா். இச்சம்பவத்தில் மூன்று குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
அதேபோன்று கருணை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் நள்ளிரவு ஒரு மணி அளவில் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள வீடுகளை இடித்து சேதப்படுத்தியுள்ளது இதேபோன்று காட்டு யானைகள் எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் பலா, வாழை போன்ற மரங்கள் வாளர்க்கப் படுவதாலும் ரேஷன் கடையில் உள்ள பொருள்களின் வாசனையாளும் ஈர்க்கப்படும் காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மனித வனவிலங்குகள் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் யானைகளுக்கு பிடித்தமான உணவு பயிர்களை பயிரிட்டு யானைக் கூட்டங்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வராமல் தடுக்க வேண்டும் என்றும் எஸ்டேட் பகுதி குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்ய எஸ்டேட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் குடியிருப்பு அருகில் வனவிலங்குகள் வந்தால் தெரியும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்தி களுக்காக
-சி.ராஜேந்திரன்மற்றும்
வால்பாறை பகுதி
நிருபர்
-திவ்யகுமார்.