கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன இந்த எஸ்டேட்டுகளில் தொழிலாளர்களாக பலரும் பணிபுரிந்து வரும் நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட சிறுகுன்ற எஸ்டேட் எல். டி. பகுதியில் தொழிலாளர்களின் குடியிருப்பின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த வடமாநிலத்தைச் மர்தீப் (வயது 7, த/பெ சஞ்சய் புவான்.) என்ற சிறுவன் குடியிருப்புக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான் அப்பொழுது புதர் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை திடீரென்று விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் பின்புறம் தாக்கியதால் சிறுவன் பயத்தில் அலறி உள்ளான் உடனே அருகில் உள்ள மக்கள் சத்தமிட்டு சிறுத்தையை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுவனை எஸ்டேட் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர் மேலும் சிறுத்தையை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். வால்பாறை பகுதிகளில் மனித வனவிலங்குகள் மோதல் அதிகரித்து வருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. மருத்துவமனைக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த சிறுவனுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.