தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழர் விடுதலைக் களம் கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். வடக்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீரோடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விளாத்திகளும் பகுதி விவசாய பொதுமக்களுக்கு மழை நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார் வழங்கினார்.
மாநிலத் துணைத் தலைவர் சாமி, மாநில சட்ட ஆலோசகர் பிரபுஜீவன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆறுமுகப்பெருமாள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை.