கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இளைஞர்கள்பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கோவை நிர்மலா மகளிர்கல்லுாரி வளாகத்தில் டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி படித்தவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம். இந்த முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது பயோடேட்டா’ மற்றும் கல்வி சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம். பணி நியமன உத்தரவு உடனடியாக வழங்கப்படும். மேலும் 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் ஆட்கள் தேர்வு தேர்வு செய்ய உள்ளன.
வேலை தேடுவோர்,www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில்,candidate loginல்பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, 94990 55937 என்ற எண்ணுக்கு, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.