தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதியில் ஆதனூர் ஊராட்சி,மிளகுநத்தம் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.25-லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
பின்னர் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பேனா வழங்கினார், மேடையில் பேசியது உங்கள் ஊரில் குறைகளை எங்களிடம் தெரிவித்தால் போதும் உடனே தீர்வு கிடைக்கும். இந்த கிராமத்தில் உள்ள தாரை பாலத்தை அகற்றி விரைவில் புதிய பாலம் அமைத்து தருகிறேன் என பேசினார். இந்த நிகழ்வின் போது ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் ஓட்டப்பிடாரம் துணை ஒன்றிய பெருந்தலைவர்,ஓட்டப்பிடாரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி , வட்டார கல்வி அலுவலர் பவனந்ஈஸ்வரன் பள்ளி தலைமை ஆசிரியை மேரிவிஜிலி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்,
ராதாகிருஷ்ணன் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரத்தினவேல் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி,ராஜேஷ்வேல் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் ஒன்றிய பொருளாளர் அரி பாலகிருஷ்ணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ் M.சண்முகபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் U.Mசங்கர் கிளைச் செயலாளர் மூக்கையா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.