கோவை அசோகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவியை மாட்டுக்கறி உண்பதாகச் சொல்லி துன்புறுத்தியதுடன், அவரை ஒருமையில் பேசியும், ஷூக்களைத் துடைக்கச் சொல்லியும் வற்புறுத்திய ஆசிரியர்கள் அபிநயா, ராஜ்குமார் ஆகியோரை எஸ்ஐஓ வன்மையாகக் கண்டிக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாணவர்களுக்கு சமத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் கற்பிக்க வேண்டிய ஆசியர்களே இப்படியான மத ரீதியான பாகுபாட்டில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. பல மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் இது பாதிக்கும். இந்தக் குற்றத்தில் தொடர்புடைய தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவியிடம் மன்னிப்புக் கோர வேண்டும். பள்ளிக்கல்வித்துறை இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற இஸ்லாமிய வெறுப்புக் குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என SIO தமிழ்நாடு மாநில இணைச் செயலாளர்முஹம்மது ஜாஃபர்
கூறினார்
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.