கோவை மாவட்டம் போத்தனூர். 85 வது வார்டுக்கு உட்பட்ட அம்மன் நகர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில வருடங்களாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வந்த நிலையில் சாக்கடை கழிவுநீர் பிரச்சனை மற்றும் மின்விளக்கு தார் சாலை குடிநீர் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை அந்த பகுதியில் சரி செய்து தர வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் துணை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு எழுதியுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தங்களது குடியிருப்பு பகுதிகளில் அதிகமான கொசு மற்றும் ஈக்கள் தொந்தரவும் மழை பெய்தால் மிக மோசமான சாலை பிரச்சனையும் அங்குள்ள குடியிருப்புகளில் அன்றாடம் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதில் உள்ள பிரச்சனைகளையும் அந்தப் பகுதி பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே கவனத்தில் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.