மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில், விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் முன்னிலையில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பாரதியாரின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் என்.கே. பெருமாள், விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், முன்னாள் யூனியன் சேர்மன் வரதராஜ பெருமாள், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்,கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், அவைத் தலைவர் கணபதி, எட்டையாபுரம் வார்டு செயலாளர் கருப்பசாமி,சின்னத்துரை, மனோகர்,காா்டன்பிரபு, ரத்தினம்,சிவா,மோகன்,கார்த்திக், செல்வி,சாந்தி உட்பட அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.