கோவை EVGO என்ற ஆன்லைன் செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த செயலின் நிறுவனர் வீசிஸ் தேசாய் எனவும் அவருக்கு கீழே ராக் ஸ்டா என்ற நபர் இருப்பதாக குறிப்பிட்டு மூன்று கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தியுள்ளனர்.
1 வது 680 ரூபாய் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு 37 ரூபாய் வீதம் 35 நாட்களுக்கு 1295 ரூபாய் கிடைக்கும். 2 வது திட்டத்தில் 6000 ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 480 ரூபாய் வீதம் 52 நாட்களுக்கு 24,960 ரூபாய் கிடைக்கும். 3 வது திட்டத்தில் 58000 முதலீடு செய்தால் தினமும் 5200 ரூபாய் வீதம் 20 நாட்களுக்கு 1,52,000 ரூபாய் கிடைக்கும் என கவர்ச்சிகரமாக விளம்பர படுத்தியுள்ளனர்.
மேற்கண்ட திட்டங்களில் பணம் செலுத்தியவர்களுக்கான தொகையை தவறாமல்
EVGO நிறுவனம் கொடுத்து வந்துள்ளது. இதனை நம்பி தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் என கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் Whatapp செயலி மூலம் ஒருங்கிணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென EVGO செயலி செயல்படவில்லை இருந்தாலும் Whatapp குழு இருப்பதால் அதில் தகவல் வரும் என லட்சக்கணக்கில் பணம் செலுத்தியவர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், முதலீட்டாளர் ஒருவர் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் EVGO நிறுவனத்திடம் mail மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அது போலிச்செயலி என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் ஆய்வாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் 20 பேர் சுமார் 30 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுத்தருமாறு புகாரளித்தனர்.
இச்செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து 2000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் என்ற சிந்தனையோடு,
செய்தியாளர்,
-M.சுரேஷ்குமார்.