கடந்த டிசம்பர் 16 & 17 தேதி கனமழையால் இன்னும் தூத்துக்குடி மாநகரம் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தூத்துக்குடியில் இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி குமரன் நகர் பகுதி இருந்து வெள்ள பாதிப்பு காரணமாக எட்டயபுரத்துக்கு வந்த மக்களுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களை தங்க வைத்து தனது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு அடிப்படை தேவைகளான போர்வை, குடிநீர்,உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர் மற்றும் அங்கு உள்ள குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கட் பாலு வழங்கி வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.