கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 37 ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. மேலும் 15 ஆம் தேதி காலை ஐயப்பனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து நடுமலை ஆற்றில் இருந்து ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகமும் ஆராட்டு விழாவும்108 கலசபூஜையும் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து 1008 தீப மண்டபத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு ஊஞ்சல் சேவையுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை மகா கணபதி பூஜையும் சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது பின்பு கலந்து கொண்ட பக்த கோடி பெருமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிங்காரி, மேளம், சிக்காட்டம் உள்ளிட்ட மேளதாளம் முழங்க நல்ல காத்து ஆற்றில் இருந்து ஐயப்ப பக்தர்கள் திருவிளக்கு,பாலக் கொம்பு எடுத்து ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் G.அசோக் குமார், அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம் வால்பாறை தலைவர் AT.மூர்த்தி, செயலாளர் T.சந்திரசேகர், பொருளாளர் R.அழகர்சாமி, விழா ஆலோசகர்
வழக்கறிஞர் தா.பால்பாண்டி மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்க மாநில மாவட்ட வால்பாறை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தினார்கள் மேலும் வால்பாறை அரசு கல்லூரி N N S மாணவர்கள் அன்னதானப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டனர்.
குறிப்பாக விழாவிற்கு உரிய பாதுகாப்பினை வால்பாறை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சிறப்பாக தன் பணியை செய்தனர். மேலும் இவ்விழாவில் வியாபாரிகள், பொதுமக்கள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஓட்டுநர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு விழாவினை மேலும் சிறப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம்.வால்பாறை .