தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் இன்று காலை யூனியன் தலைவர் ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் யூனியன் துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.
கூட்டத்தின் முதலில் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது பின்னர் ஒன்றிய கவுன்சிலர்களின் மக்களின் தேவைகளை கோரிக்கையாக வைத்தனர்.
பெரும்பாலும் கோரிக்கைகள் ரேஷன் கடைகள் கட்டி முடிக்கப்பட்ட பணிகள் திறக்க மற்றும் ஒட்டப்பிடாரம் குறுக்குச்சாலை வழியாக பள்ளி மாணவிகளுக்கு நீதிமன்ற ஊழியர்களுக்கு பேருந்து வசதிகள் அமைத்து தர கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் 500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் ரேஷன் கடை கண்டிப்பாக அமைத்து தரப்படும் அதற்கு கீழ் உள்ள மக்கள் தொகை கொண்ட கிராமத்திற்கு நடமாடும் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பேருந்து வசதி அது சம்பந்தமான அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.
யூனியன் துணை தலைவர் காசி விஸ்வநாதன் அவர்கள் பேசியது :
இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார் அடுத்த கூட்டம் வரும்போது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பேசினார்.இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா அவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி