கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே அமைந்துள்ள சின்ன கானல் கிராம பஞ்சாயத்து பகுதியில் வசித்து வரும் தாமஸ் மற்றும் விஜயம்மா என்பவர்கள். காலை 4 மணி அளவில் நாங்கள் வளர்த்து வந்த நாயின் சத்தத்தை கேட்டு பின் கதவு வழியாக வெளியே ஓடி வந்தனர் முன்பக்கத்தில் ஒற்றை காட்டு யானை வீட்டை சேதப்படுத்திக் கொண்டிருந்த போது இருவரும் நூலிழையில் உயிர் தப்பித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நீண்ட நேரம் அப்பகுதியில் இருந்த யானை மொத்த வீட்டையும் தகர்த்து உள்ளது. இதேபோன்று 2000ஆம் ஆண்டும் காட்டு யானையின் தாக்குதலால் தன்னுடைய வலது கையில் காயம் ஏற்பட்டு ஊனமுற்றோர் என்று கேரளா அரசால் அங்கீகரிக்கப்பட்டு ஊனமுற்றோருக்கான இலவச இட வழங்கத் திட்டத்தின் மூலம் 2003 ம் ஆண்டு சுமார் ஒரு ஏக்கர் இடம் கேரளா அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் குடிசை அமைத்து வசித்து வரும் இவர்களின் நிலைமை மீண்டும் அரசு கண்டு கொள்ளவில்லை என குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.