கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எஸ்டேட்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் கூட்டமாக வருவது தற்பொழுது வாடிக்கையாகி உள்ளது. யானைக் கூட்டங்கள் குடியிருப்பு அருகில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கருமலை எஸ்டேட் சுடுகாட்டு பாடி குடியிருப்பு அருகில் யானைகள் முகாமிட்டுள்ளன இதனை கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வரும் தேயிலை காட்டுக்குள் யானைகள் நின்பதை பார்த்து அச்சமடைந்தனர். வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானை கூட்டங்கள். இரவு நேரங்களில் ரேஷன் கடைகள். மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சமையலறை போன்ற பகுதிகளை உடைத்து சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்துள்ளார்கள் எனவே வனத்துறை அதிகாரிகள் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் வராமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை கூட்டங்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வால்பாறை பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.